
பைரவரின் வரலாறு & வழிபாடுகள்.
- Bairavar Tharisanam *Vision* BTV
- Jan 1
- 1 min read
Updated: Jan 2
2026 ஆம் ஆண்டு அசிதாங்க
பைரவரின் ஆசிர்வாதத்துடன் விளைநிலங்கள் செழித்து விவசாயம் மேலோங்கி அனைவருக்கும் தனம், தானியம் கிட்டி பெருவாழ்வு வாழ பைரவர் வணங்குவோம். 🙏
அசிதாங்க பைரவரின் வரலாறு.
நம் பண்டைய கால புராணங்களில் சிவபெருமானின் பல அவதாரங்களில் பைரவ அவதாரம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே.
அஷ்ட பைரவர்களின் முதல் பைரவராக இருப்பவர்.
அரிதாக பைரவர்
தாருகாபுரத்தில் இருந்த கால அக்னியில் தோன்றியவரே சொர்ணா ஆகாஷ்ன பைரவர் அவர் தோன்றியபோது இருளை விளக்குவதற்காக இந்த பூமி எங்கிலும் அக்னி குழம்பை வெளிச்சமாக பூசினார்,

அந்த அக்னியை குளிர்விக்க அசிதாங்க பைரவர் கரு மேகங்களையும், இடி, மின்னல்களையும், கட்டுப்படுத்தி மலையாக பொழிந்து, நீர் வளங்களை உருவாக்கி அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ வழி செய்தர்
ஆதலால் நீர்நிலைகளில் எங்கும் அசிதாக பைரவரின் ஆசீயை நீங்கள் பெறலாம், இப்பைரவர் காசி மாநகரில் விருத்தகாலர் கோவிலில் அருள்செய்கிறார். அன்னப்பறவையை வாகனமாகக் கொண்டவர்கள். பைரவரின் துணைவியாக சப்த கன்னிகளின் ஒருத்தியான பிராம்ஹி விளங்குகிறாள்.

🕉️🙏சாந்த நிலையில் அசிதாங்க பைரவர்

பைரவர் வழிபாடு
தேய்பிறை அஷ்டமி யில் நெய்(அகலுதீபம்) தீபம் ஏற்றி வழிபடலாம்.
திங்கள் கிழமையில் அபிஷேகம் செய்வது சிறப்பு.
அபிஷேகத்திற்கு இளநீர், தயிர் வாங்கித் தருவது சிறந்த பரிகாரமாகும்.
வளர்பிறை அஷ்டமி வேண்டுதலை நிறைவேற்ற உகந்த நாளாகும்.
கண் திருஷ்டி விலக
இப் பைரவர் வீட்டில் வாசம் செய்ய எலுமிச்சை சாறில் மஞ்சள் பொடி சேர்த்து சிறிது தண்ணீருடன் கலந்து வீட்டு வாசலை சுத்தம் செய்து விட்டு,
கடல் நீரில் சிறிது மஞ்சள் தூள் சிறிது பன்னீர் சிறிது ஜவ்வாது கோமியத்துடன் வீடு முழுவதும் தெளித்து வந்தால் அசிதாங்க பைரவரின் ஆசிர்வாதம் கிட்டும் கண் திருஷ்டி விலகும்.
தொடர்புக்கு :-
பைரவர் தரிசனம் ஜோதிட நிலையம்.
ஜோதிடர் சுந்தரராமன்,
குத்தாலம் 609801,
📞 +919952717271.
Tamil mythology
Asta Bhairava HD image
Asithanga Bhairava image
History of Bhairava
🙏 சிவாய நம 🙏



Comments